சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியானது.
அதனைத்தொடர்ந்து நடிகர் கமலின் ராஜ்கமல் ஃப்லிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். வரலாற்று படமாக உருவாக உள்ள இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Dei 2k kids , 90’s mood la nalaiku sharp ah 6.06 pm ku varen 🧨
— Silambarasan TR (@SilambarasanTR_) October 20, 2024
இதையும் படிங்க : "படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியாவது மிக முக்கியம்" - 'வேட்டையன்' இயக்குநர் ஞானவேல் பேச்சு!
மேலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில், தம்+மன்மதன்+வல்லவன்+விடிவி இன் ஜென் Z மூடு = நண்பா நெக்ஸ்ட் என்ற பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அப்டேட் குறித்து இன்று மேலும் ஒரு பதிவை சிம்பு பதிவிட்டுள்ளார். அதில், டேய் 2k kids , 90’s mood-ல நாளைக்கு சார்ப்பா 6.06 pm வரேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்