ETV Bharat / entertainment

"இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கல்கி 2898 AD" - ரஜினிகாந்த் புகழாரம்! - Rajinikanth congrats Kalki team

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:21 PM IST

Kalki 2898 AD: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898 AD படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கல்கி படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்
கல்கி படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த் (Credits - Film poster/ETV Bharat)

ஹைதராபாத் : இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய புதிய படம் 'கல்கி 2898 AD'. இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கல்கி படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கல்கி படத்தைப் பார்த்தேன். மிகவும் பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வினால் இந்திய சினிமா அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. இந்த படத்தை தயாரித்த வைஜயந்தி மூவிஸ் அஸ்வினி தத், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோருக்கும் கல்கி குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், கல்கி இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும்" அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் காம்போ; பைசன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! - BISON Shooting

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.