ETV Bharat / entertainment

”எனது குழந்தை பருவத்தை நினைவுபடுத்தியது”... 'மெய்யழகன்' குறித்து நடிகர் நாகார்ஜுனா நெகிழ்ச்சி! - Nagarjuna praised Meiyazhagan movie - NAGARJUNA PRAISED MEIYAZHAGAN MOVIE

Nagarjuna praised Meiyazhagan movie: கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தை பாராட்டி நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெய்யழகன் படத்தை பாராட்டிய நாகார்ஜுனா
மெய்யழகன் படத்தை பாராட்டிய நாகார்ஜுனா (Credits - @2D_ENTPVTLTD X account, ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 2:39 PM IST

சென்னை: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 2018இல் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மெய்யழகன் படத்தின் டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. கார்த்தி, அரவிந்த்சாமியின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்படுகிறது. பிரேம்குமார் தான் எழுதிய நூலை படமாக்கியுள்ளதாக கூறியுள்ள நிலையில், மெய்யழகன் திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதே நேரத்தில் வெளியூர்களில் வாழும் மக்கள் தங்களுக்கு ’மெய்யழகன்’ படம் பார்க்கும் போது சொந்த ஊரில் சிறு வயதில் வாழ்ந்த நினைவுகள் தோன்றுவதாக நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் அளித்துள்ள வசூல் அறிக்கையின் படி, கடந்த மூன்று நாடகளில் மெய்யழகன் திரைப்படம் மொத்தமாக 14 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று மூன்றாவது நாள் (செப்.29) மட்டும் 5.60 கோடி வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஓய்வு குறித்து கிண்டலாக கேள்வி எழுப்பிய கரண் ஜோஹர்... மாஸாக பதில் சொன்ன ஷாருக்கான்! - shahrukh khan about retirement

மேலும் பல சினிமா பிரபலங்கள் மெய்யழகன் படத்தை பாராட்டி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் மெய்யழகன் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “என் தம்பி கார்த்திக்கு, 'சத்யம் சுந்தரம்' படம் பார்த்தேன். கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கதாபாத்திரம் நன்றாக இருந்தது. நான் படம் பார்க்க தொடங்கியது முதல் இரவு தூங்க சென்றது வரை புண் சிரிப்புடன் இருந்தேன். இப்படம் எனது சிறு வயது நாட்கள் பற்றியும், நமது oopiri பட நாட்கள் பற்றியும் நினைவுபடுத்தியது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.