சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’ நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகிறது. ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின், கனடா என பல்வேறு திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்று சாதனை படைத்தது.
A moment to cherish for our team #Kottukkaali. Appreciation from the pioneer of Indian cinema, our Ulaganayagan @ikamalhaasan Sir.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 21, 2024
This letter is a treasure.
Thank you so much Sir. 🙏🙏❤️❤️ pic.twitter.com/uoCNkTYA1C
கொட்டுக்காளி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் சினிமாவின் பிரபலங்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. பி.எஸ்.வினோத் ராஜ் இந்திய அளவில் பெரிய இயக்குநராக எதிர்காலத்தில் இருப்பார் என கோலிவுட்டில் பலர் கூறி வருகின்றனர். இதேபோல் படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் சூரியின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விடுதலை படம் வெளியானது முதல் அவரது வேறு பரிணாம நடிப்பு வெளிப்பட்டு வருகிறது எனவும், நடிப்பில் இவ்வளவு திறமையை வைத்து கொண்டு வெறும் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் ஏன் சூரி நடித்து வந்தார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே கொட்டுக்காளி படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் கொட்டுக்காளி படத்தை பாராட்டி, படம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அந்த அறிக்கையில், படம் ஓடும் நேரம், 103 நிமிடங்கள், 44 நொடி என்றவுடன் தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு, நவீன கதைசொல்லி களமாகிவிட்டது என புரிகிறது என்றார்.
மேலும் கொட்டுக்காளியில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும், சூரி, அன்னா பென் ஆகியோரின் நடிப்பு குறித்து பாராட்டியுள்ளார். அதேபோல் கொட்டுக்காளி படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எவ்வாறு அணுக வேண்டும் எனவும், ரசனை குறைபாடு உள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். கொட்டுக்காளி படம் குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "பெர்லின் டூ ராஜாக்கூர்"... சொந்த ஊரில் கொட்டுக்காளி படக்குழுவினரை கௌரவித்த சூரி! - soori honoured kottukkali team