சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையில், நடிகர் துல்கர் சல்மான், நடிகை மீனாட்சி சவுத்ரி, ராம்கி நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ராம்கி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், “ரொம்ப நாட்களுக்கு பிறகு என்னுடைய படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் அனைவரின் வாழ்க்கையிலும் பொருந்தும்.
நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்வதற்கு 40 நாள் ஆகும். ஒவ்வொரு மொழிக்கும் 10 நாட்கள் எடுக்கும், 40 நாட்களும் இருட்டில் அமர்ந்தே பேசுவேன். அதிலேயே நான்கு முறை நடித்தது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது என்றார். டிரைலரில் வருவது என்னுடைய குரல் இல்லை, ஆனால் படம் வெளியாகும் போது படத்தில் என்னுடைய குரல் தான் இருக்கும் அதற்கு நான் கேரன்டி. இதில் வரும் குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கின்றது.
நான் ரசித்த பிடித்த நடிகர்கள் உடன் நடிப்பது எனக்கு பாக்கியம். அப்படி ஒருவர் தான் ராம்கி. அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'காந்தா' என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். இதுவும் ஒரு பீரியட் திரைப்படம் தான். இப்படத்தில் நடித்துள்ள நடிகை மீனாட்சி சவுத்ரி இரவு ஒரு படம், காலையில் ஒரு படம் என்று நடித்து வருகிறார். அதனால் இங்கு வர முடியவில்லை. ஒரு நடிகனாக இதை புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.
இந்த படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' என்ற பெயர் வைத்துள்ளீர்கள், உங்கள் வாழ்க்கையில் லக்கி என்றால் எதை கூறுவீர்கள் என்ற கேள்விக்கு, "என் வாழ்க்கையில் நான் லக்கி தான், பிறந்த வீடும் லக்கி தான் என்றார். மேலும் என் அப்பா 'பாஸ்கர் ராஸ்கல்' என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல் தான் இந்த படத்தின் பெயரை கேட்டதும் மிகவும் பிடித்தது.
இதையும் படிங்க: நடிகர் பிரபாஸ் பிறந்தநாள்: 'ராஜாசாப்' படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியீடு!
நான் நடிகர் அஜித்குமாரின் மிகப் பெரிய ரசிகன். அவரை நான் மதிக்கிறேன் அவர் போல் யாரும் இருக்க முடியாது என்று பேசினார். மேலும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் அமரன், பிரதர், பிளடிபெக்கர் ஆகிய படங்களும் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும். லக்கி பாஸ்கர் படத்துக்கும் வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்