சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர். இவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.
Raayan trailer https://t.co/w8BxBoZLwD @sunpictures @arrahman
— Dhanush (@dhanushkraja) July 16, 2024
தற்போது தெலுங்கு சினிமாவில் குபேரா படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது என பிஸியாக உள்ளார். இந்நிலையில், தனது 50வது படமாக ராயன் படத்தை நடித்து இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து இறுதியாக 3 பாடல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியானது சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ளது.
அந்த ட்ரெய்லரில், துஷாரா விஜயன், தனுஷ் இன்ட்ரோவில் ட்ரெய்லர் தொடங்குகிறது. அடுத்ததாக, காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என செல்வராகவன் பேசும் டயலாக்கில் ட்ரெய்லர் மூவ் ஆகிறது. ட்ரெய்லரில் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதுவும் ட்ரெய்லரின் இறுதியில் உசுரே நீ தானே.. நீ தானே நிழலாய் உன் கூட.. ரஹ்மான் மியூசிக் மனதை நொறுக்கும் வண்ணம் உள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் எப்போ ரிலீஸ் தெரியுமா? - Chutney Sambar Web Series