சென்னை: 2022 ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை பெறுகிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருதை ஜானி மற்றும் சதிஷ், மற்றும் சிறந்த நடிகை விருதை திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெறுகின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் 4 விருதுகளையும் திருச்சிற்றம்பலம் படத்துக்கு இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் பல்லவியின் 'கார்கி' படத்திற்கு விருது கிடைக்கவில்லை.
இதனிடையே, விருது பெற்றவர்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்காக நித்யா மேனனுக்கு விருது கிடைத்ததை ஒட்டி அவருக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Congratulations team thiruchitrambalam. It’s a personal win for me that @MenenNithya as shobana has won the national award. Big congrats to Jaani master and Satish master. It’s a great day for the team.
— Dhanush (@dhanushkraja) August 16, 2024
இதுகுறித்து அவர தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சிற்றம்பலம் டீமுக்கு வாழ்த்துகள். நித்யா மேனனுக்கு விருது கிடைத்தது எனது தனிப்பட்ட விருதாக பார்க்கிறேன். ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷுக்கு பெரிய வாழ்த்துகள். திருச்சிற்றம்பலம் படக்குழுவுக்கு இது சிறந்த நாள்" என்று வாழ்த்தியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் கன்னட படமான 'காந்தாரா' படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட நடிகர் யஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் முதல் காந்தாரா வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள் முழு பட்டியல்!