ETV Bharat / education-and-career

பிஎட் மாணவர்களை வகுப்பிற்கு வராமல் தேர்வு எழுத வைக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து! - TN Teachers Education University - TN TEACHERS EDUCATION UNIVERSITY

Tamil Nadu Teachers Education University: ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மாணவர்கள் வகுப்பிற்கு வராமல் தேர்வு எழுத வைக்கும் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 5:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் தற்பொழுது பிஎட் 2 ஆண்டுகள் பட்டப்படிப்பும், சில கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பிஎட் 4 ஆண்டுகள் படிப்பும் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் கல்வியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் 75 சதவீதம் நேரடியாக வருகை புரிந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், சில கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு வராவிட்டாலும் வருகை புரிந்ததாக கூறி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ராஜசேகரன் அனைத்து கல்லூரியின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்துடன் இணைவு பெற்ற, சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் பட்ட வகுப்புகளில் வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் மூலமாக மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC-யில் இருந்து புகார் மனு பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நேரில் சென்று, கேரளா காவல்துறையில் Global Academy மீது எப்ஐஆர்(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி முதல்வர்கள் இது போன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது.

இது போன்ற தவறான Irregular மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் கல்லூர்களின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பில், முன் அறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சி மன்றக் குழுவின் அனுமதி பெற்ற கல்லூரிகளின் இணைவு ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார்.. சத்தியமங்கலம் அரசு கல்லூரி கெளரவப் பேராசிரியர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.