ETV Bharat / education-and-career

பிஎஸ்சி, பிசிஏ மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் இலவச பயிற்சி! - விண்ணப்பிப்பது எப்படி? - Chennai IIT Free Training Program - CHENNAI IIT FREE TRAINING PROGRAM

Chennai IIT Free Training Program: பிஎஸ்சி, பிசிஏ பட்டப்படிப்புகள் முடித்த மாணவர்களுக்கு தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் இலவச பயிற்சி திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஐஐடி (கோப்புப் படம்)
சென்னை ஐஐடி (கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 7:43 AM IST

சென்னை: சென்னை ஐஐடியின் ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் நிறுவனம், தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. இதில், உள்கட்டமைப்பு மற்றும் தகவல் உதவி மையம் போன்றவற்றுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். லைட்ஸ்ரோம் (https://lightstorm.net/) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் பண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம் பெறும். பயிற்சிக்கான் மாணவர்களை சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் தேர்வு செய்து, அவர்களுக்கு தொழில்துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளித்து தயார்படுத்தும்.

இந்த பயிற்சித் திட்டம் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும். விருப்பமுள்ள மாணவர்கள்
https://forms.gle/7RhAKgrGRgwr17zd6 என்ற இணையதள முகவரியில் ஜூன் 12ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை ஐஐடி தகைசால் பேராசிரியர் மங்கள சுந்தர் கூறுகையில், "கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அவர்களுக்கு திறன்களை வளர்ப்பது எங்களது கடமை. வாடிக்கையாளருக்கு சிறந்த ஆதரவையும், சேவையையும் வழங்க பங்கேற்பாளர்களைத் தயார்படுத்தும் விரிவான பயிற்சி அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியாகும்.

இத்திட்டத்தில் பரந்த அளவிலான தொழில்நுட்ப, வாடிக்கையாளர் சேவை சிக்கல்களைத் திறமையாகவும், திறம்படவும் கையாள்வதற்குத் தேவையான திறன்களையும் ஆற்றலையும் வழங்குவதுடன், பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளைக் கையாளவும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்" என்றார்.

இலவச பயிற்சி: இந்த திட்டத்தில் பயிற்சி முற்றிலும் இலவசம். ஆனால் 3 மாத பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும் இது வகுப்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டமாக இருக்கும்.

பாடநெறியின் உள்ளடக்கம்: நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் பண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள் மற்றும் தனித்திறன்கள் போன்றவை பாடநெறியில் இடம்பெறும்.

தேவைப்படும் தகுதிகள்: 2023, 2024 பிஎஸ்சி தேர்ச்சி (தகுதியான பாடத்திட்டம் - கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரித் தொழில்நுட்பம்), பிசிஏ பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் சராசரி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான மாணவர்கள் சிறிய அளவிலான, நடுத்தர அளவிலான நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப உதவிப் பிரிவில் சேருவதற்கு திறமைப்படுத்துதல்; மாணவர்களின் இருப்பைத் தெரிவிக்கும் வகையில் மாதிரி நேர்காணல்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பு உதவி வழங்கப்படும். இப்பயிற்சி வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லை என ஐஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. விண்ணப்பம் நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.