ETV Bharat / bharat

வெள்ளை மாளிகையில் விமர்சையாக நடந்த தீபாவளி கொண்டாட்டம்.. அதிபர் ஜோ பைடன் நெகிழ்ச்சி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

தீபாவளி கொண்டாட்டத்தில் ஜோ பைடன்
தீபாவளி கொண்டாட்டத்தில் ஜோ பைடன் (credit - White House)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 12:20 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கா எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளை மாளிகையின் நீல அறையில் தீபத்தை ஏற்றி வைத்த ஜோ பைடன், “ஜனாதிபதி என்ற முறையில், வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய விஷயம். தெற்காசிய சமூகம், கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் மூர்த்தி வரை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் எனது நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அமெரிக்காவில் இப்படியொரு சிறப்பான நிர்வாகத்தை கொண்டிருப்பதன் மூலம் நான் எனது உறுதிப்பாட்டைக் கடைபிடித்துள்ளேன் என்பதற்கு பெருமை கொள்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: ஐபோன் 16-ஐ தடை செய்த இந்தோனேசியா: காரணம் என்ன?

தொடர்ந்து இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட புலம்பெயர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜோ பைடன், தெற்காசிய அமெரிக்க சமூகம், அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்தியுள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகம் நீங்கள். இப்போது, ​​வெள்ளை மாளிகையில் தீபாவளி வெளிப்படையாகவும், பெருமையாகவும் கொண்டாடப்படுகிறது என்றார்.

மேலும், "இது என் வீடு அல்ல.. இது உங்கள் வீடு... இன்று நாம் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறோம்.. அமெரிக்கா என்ற ஐடியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அமெரிக்க ஜனநாயகம் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. எங்களுடையது போன்ற பலதரப்பட்ட நாட்டில், நாங்கள் விவாதம் செய்கிறோம், கருத்து வேறுபாடு கொள்கிறோம். ஆனால் ஒருபோதும் நாம் எப்படி இங்கு வந்தோம், ஏன் வந்தோம் என்பதை மறக்கக்கூடாது'' என ஜோ பைடன் பேசினார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதால் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.