டெல்லி: குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஹெல்த் டிரிங்க்ஸ் என்ற பெயரில் ஏராளமான பானங்கள் சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன. இவை எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்பதை அறியாமல், மக்கள் பலரும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் இதை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.
மறுபக்கம், பலருக்கும் இவை அனைத்தும் ஆரோக்கியமான பொருட்கள்தானா என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் தற்போது போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் ஹெல்த் டிரிங்ஸ் பிரிவிலிருந்து அகற்றுமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்கள் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணையில், அவை அனைத்தையும் ஹெல்த் டிரிங்ஸ் பட்டியலில் சேர்க்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முடிவை முன்வைத்துள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இதைக் கருத்தில் கொண்டு அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் போர்ன்விட்டா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் ஹெல்த் டிரிங்ஸ் பிரிவிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மேலும் ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதில், பால், தானியம் மற்றும் மால்ட் உள்ளிட்ட பல பானங்களில் ஹெல்த் டிரிங் (Health Drink) அல்லது எனர்ஜி டிரிங் (Energy Drink) என்ற லேபில்களை ஒட்ட வேண்டாம் எனவும், குளிர்பானங்கள் உள்ளிட்டவைதான் ஹெல்த் டிரிங் (Health Drink) அல்லது எனர்ஜி டிரிங்(Energy Drink) பட்டியலின் கீழ் வரும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: சர்வீஸ் செய்த போது பற்றி எரிந்த செல்போன் பேட்டரி.. வைரலாகும் வீடியோ! - Battery Exploding At Service Shop