ETV Bharat / bharat

ஜூன் 24-ல் தொடங்குகிறது 18-ஆவது மக்களவை கூட்டத்தொடர்! - 18th Lok Sabha First session

First session of 18th Lok Sabha: 18-ஆவது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர் ஜூன் 24-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கிரண் ரிஜிஜூ
அமைச்சர் கிரண் ரிஜிஜூ (Credit - Kiren Rijiju X Page)
author img

By ANI

Published : Jun 12, 2024, 10:51 AM IST

Updated : Jun 12, 2024, 1:31 PM IST

டெல்லி: நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியை தவிர, பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதே போல் மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமாராக பதவியேற்றபின் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 20,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான காப்பில் கையெழுத்திட்டார்.

18வது மக்களவையின் முதல் அமர்வு: இந்தநிலையில் பதவியேற்பு விழாவை தொடர்ந்து எப்போதும் வேண்டுமானாலும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான (18th Lok Sabha Parliament Session) அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் 18-ஆவது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகர் உரையுடன் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினருகளுக்கு கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய சபாநாயகர் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் 264-ஆவது மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சோனியா காந்தி, மம்தா வரிசையில் கனிமொழி.. 18 ஆண்டு கால அனுபவத்திற்கு கிடைத்த மரியாதை!

Last Updated : Jun 12, 2024, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.