ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து ரூக்கி நோக்கி தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர், தனது தங்கையுடன் காரில் பயணித்துள்ளார். அப்போது அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை முந்திச் சென்று வழிமறித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து காரில் இருந்து இருவரையும் இறங்கக் கூறி இளைஞர்கள் மிரட்டியதாகவும் கார் கண்ணாடியை உடைத்து இரண்டு பெண்களிடம் இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இரண்டு பெண்களின் ஆடைகளை கிழித்து இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இரண்டு பெண்களும் சம்பவ இடத்தில் இருந்து துரிதமாக காரில் தப்பிச் சென்ற நிலையில், அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஒரு இளைஞரை கைது செய்தனர். மற்றொரு இளைஞர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் இன்று (ஜூன்.11) திங்கட்கிழமை காலை அந்த இளைஞரையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்திய போலீசார் பின்பு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமனத்கர் கிராமப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அர்ஜூன் மற்றும் ஷியாம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் இஸ்மெயில்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன? - SC refuse to stay Neet counselling