ETV Bharat / bharat

மக்களவை தேர்தலுக்கு முன் நக்சல் வேட்டை! என்ன காரணம்? 10 ஆண்டுகளில் இத்தனை நக்சல்கள் என்கவுன்டரா? - Naxal Encounter - NAXAL ENCOUNTER

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:31 PM IST

கன்கெர் : முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கன்கெரில் பாதுகாப்பு படையினர் நடத்திய பயங்கரவாத வேட்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய முக்கிய வேட்டைகளில் இதுவும் ஒன்று எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில், நவீன துப்பாக்கிகல், ஆயுதங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் பஸ்டர், கன்கெர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர்களில் 79 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போன்ற கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 02, 2024: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்ட லெந்தரா வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு சோதனை முயற்சியில் 13 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மார்ச் 27, 2024: சத்தீஸ்கர், பஸ்டர் மற்றும் பிஜாபூர் பகுதியில் நக்சல் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பெண் நக்சலைட்டுகள் உள்பட 6 மாவோயிஸ்ட்களை என்கவுன்டர் செய்தனர்.

பிப்ரவரி 27, 2024: சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்ட வனப்பகுதியில் ஐஇடி வெடிகுண்டுகளை மண்ணில் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த துப்பாக்கி ஏந்திய 4 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பிப்ரவரி 2 2024: நாராயன்பூர், பஸ்டர் அடுத்த கோமகள் கிராம அருகே உள்ள வனப்பகுதியில் சத்தீஸ்கர் போலீசாருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

டிசம்பர் 12, 2023: தன்டேவடா மாவட்டம் துமக்பல் மற்றும் தப்பா குன்னா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 21, 2023: சத்தீஸ்கர் கன்கெர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொயில்பெடா பகுதியில் மாவட்ட வன பாதுகாவலர்கள் நடத்திய கூட்டு ஆபரேஷனில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

செப்டம்பர் 9 2023: சத்தீஸ்கர் தன்டேவாடா மாவட்ட அரன்பூர் வனப் பகுதியில் மாவட்ட வன பாதுகாவலர்கள் நடத்திய நக்சல் எதிர்ப்பு ஆபரேஷனில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 23, 2022: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் மகாராஷ்டிரா C-60 கமாண்டோ படையினர் சேர்ந்து நடத்திய சோதனை வேட்டையில் 21 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்களை என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

நவம்பர் 26, 2022: பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 3, 2019: மகாராஷ்டிர எல்லையை ஒட்டிய சத்தீஸ்கர், ராஜ்நந்த்கான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 6, 2018: சுக்மா மாவட்டத்தில் தெற்கு சுக்மா நல்க்டாங் கிராமத்தில் உள்ள மாவோயிஸ்ட் கூடாரம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், 15 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 27, 2018: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் - தெலங்கானா பாதுகாப்பு படையினர் நடத்திய மாநிலகளுக்கு இடையேயான என்கவுன்டர் சம்பவத்தில் 6 பெண் நக்சல்கள் உள்பட 8 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 27, 2014: தெற்கு சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையான சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் குறைந்தது 15 மாவோயிஸ்ட்கள் வரை கொல்லப்பட்டதாகவும் 25 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

ஏப்ரல் 16, 2013: பஸ்டர் பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் இருந்த மாவோயிஸ்டுகளின் மறைவிடத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி! திகைத்துப் போன வளைகுடா நாடுகள்! - UAE Flood

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.