ETV Bharat / bharat

சென்னையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்! - International Space Station

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 8:37 PM IST

Updated : May 10, 2024, 9:27 PM IST

International Space Station: சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் சென்னையை கடந்து சென்ற காட்சியை இன்று இரவு 7.09 மணி அளவில் சாதாரண கண்களால் பார்க்க முடிந்தது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய புகைப்படம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மைய புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கலமாகும். கடந்த 1998ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்டவை இணைந்து உருவாக்கப்பட்டது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 109 மீட்டர் நீளம் கொண்டது. அதன் அகலம் 73 மீட்டர்கள். 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், ஒவ்வொரு 93 நிமிடத்திற்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 15.5 முறை சுற்றிவரும்.

இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது. இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியில் நிகழும் நிகழ்வு மட்டுமின்றி வானியல் நிகழ்வையும் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு சரியாக 7.09 மணியிலிருந்து 7 நிமிடங்கள் வரை சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் தென்படும் என்றும், தென்மேற்கில் தொடங்கி வட கிழக்கில் மறையும் என்றும், வெண் புள்ளியாகச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் காட்சியளிக்கும் என்றும் நாசா முன்னதாக அறிவித்தது. அதன்படி, இன்று (மே.10) இரவு சரியாக 7.09 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியைச் சுற்றியதைக் காண முடிந்தது.

இதையும் படிங்க: திருப்பதியில் ஆர்ஜிதா சேவாக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. ஏழுமலையானை அருகே தரிசிக்க விண்ணப்பிப்பது எப்படி? - TTD Online Ticket Booking

Last Updated : May 10, 2024, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.