அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தோரில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து இன்று காலை பவுரியில் இருந்து குமாவோனில் உள்ள ராம்நகருக்குச் சென்று கொண்டிருந்தது. 45 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேருந்து மார்ச்சுலாவில் உள்ள குபி கிராமத்திற்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகேயிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து அல்மோரா மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால் கூறுகையில், ''இன்று காலை காலை 8.30 மணிக்கு அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட்டின் மார்ச்சுலாவில் உள்ள குபி கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தான பேருந்து கர்வால் மோட்டார் ஓனர்ஸ் யூனியன் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து.. 7 பயணிகள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்!
பள்ளத்தாக்கு அருகே வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பின்னர் பள்ளத்தில் விழுந்துள்ளது. தற்போது வரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் ராம்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த இருவர் ராம்நகர் மருத்துவமனையில் இருந்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
இதனிடையே பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கவும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Almora, Uttarakhand. The injured would be given Rs. 50,000. https://t.co/KAjq9Agj8i
— PMO India (@PMOIndia) November 4, 2024
முதல்வர் நிவாரணம்:
பேருந்து விபத்து நடந்த பகுதியான பவுரி மற்றும் அல்மோராவின் ஆர்டிஓவை இடைநீக்கம் செய்ய முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.
जनपद अल्मोड़ा के मार्चुला में हुई दुर्भाग्यपूर्ण बस दुर्घटना में यात्रियों के हताहत होने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ। जिला प्रशासन को तेजी के साथ राहत एवं बचाव अभियान चलाने के निर्देश दिए हैं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 4, 2024
घटनास्थल पर स्थानीय प्रशासन एवं SDRF की टीमें घायलों को निकालकर उपचार के लिए…
இக்கோர விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு இன்று மீண்டும் திரும்பி வருகின்றனர். இதனால், மலை பகுதியி்ல் வாகனங்கள் நிரம்பி வருவதாக கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்