அயோத்தி (உத்தரப் பிரதேசம்): புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த கும்பாபிஷேகத்தில் முன்னிலை வகிக்கிறார். இது தவிர ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேசம் ஆளுநர் ஆனந்திபென் படேல், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில், அயோத்தி முழுவதும் பாதுகாப்பு கருதி 10 ஆயிரம் சிசிடிவி கேமிராக்கள பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சீருடை அல்லாத காவலர்கள் உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள தரம்பாத் மற்றும் ராம்பாத் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இதனால், ஹனுமன்கரி மற்றும் அஷர்ஃபி பவன் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் துணை சாலைகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத தடுப்பு காவல் படையினரும் (ATS) அயோத்தியில் பாதுகாப்பு கருதி, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகரின் அனைத்து எல்லைகளிலும் நகரின் முக்கிய பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப் படுத்தியுள்ள காவல் துறையினர், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், சாலை கட்டுப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; சட்டக்கல்லூரி மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்!
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படும், அயோத்தி ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறுகையில், "அயோத்தி பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, பல்வேறு தொழில்நுடபங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அயோத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பெருத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடங்களில், பல மொழி திறன் கொண்ட காவல்துறையினர், சீருடை இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேராக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இதனால், கடுமையான கண்காணிப்பை கடைபிடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும், சரயு நதி (Saryu) நதி பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்படுள்ளனர். இது குறித்து அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வதேச மற்றும் மாநில எல்லைகளில் பாதுகப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கண்காணிக்க காவல்துறையினர் டிரோன் கேமராக்களை பயன்படுத்த உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அசைவ உணவுகளுக்கு அசாம் மாநிலம் தடை!