பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு! சிறப்பு ஜெர்சியில் தோன்றிய இந்திய வீரர்கள்! - Indian Team Meet PM Modi - INDIAN TEAM MEET PM MODI
நாடு திரும்பிய 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Published : Jul 4, 2024, 12:22 PM IST
|Updated : Jul 4, 2024, 1:12 PM IST
டெல்லி: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று (ஜூலை.4) காலை நாடு திரும்பியது. டெல்லி விமான நிலையத்திற்கு காலை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய அணி வந்திறங்கியது.
#WATCH | Indian Cricket team meets Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg.
— ANI (@ANI) July 4, 2024
Team India arrived at Delhi airport today morning after winning the T20 World Cup in Barbados on 29th June. pic.twitter.com/840otjWkic
இந்திய அணி வீரர்கள் வருகையை முன்னிட்டு காலை முதலே விமான நிலையம் முன் ரசிகர்கள் திரண்டனர். தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த இந்திய வீரர்கள் விராட் கோலி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் கேப்டன் ரோகித் சர்மா, வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினார். மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்களுடன் இந்திய வீரர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து நட்சத்திர விடுதிக்கு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிரவிட் உள்ளிட்ட இந்திய குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
#WATCH | Indian Cricket Team leave from ITC Maurya to meet PM Narendra Modi, in Delhi pic.twitter.com/JBF0RhoVlM
— ANI (@ANI) July 4, 2024
இதனிடையே பெட்டியில் இருந்து உலக கோப்பை எடுத்து இந்திய வீரர்கள் பூரிப்புடன் கொண்டாடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய வீரர்கள் இன்று காலை 11 மணி அளவில் உலக கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அப்போது சிறப்பு ஜெர்சியை வீரர்கள் அணிந்து கொண்டனர். வழக்கமாக அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் சாம்பியன் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்த ஜெர்சியை அணிந்து கொண்டு வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு மும்பை செல்லும் வீரர்கள், திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த ஜூன் 29ஆம் தேதி உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் பார்படோசில் பெரில் புயல் தாக்கியதால் கடும் கனமழை கொட்டித் தீர்த்தது.
It's home 🏆 #TeamIndia pic.twitter.com/bduGveUuDF
— BCCI (@BCCI) July 4, 2024
சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் நேற்று (ஜூலை.3) தாயகம் புறப்பட்டனர்.
இதையும் படிங்க: தாயகம் திரும்பிய இந்திய அணி.. பிரதமர் மோடி சந்திப்பு முதல் பாராட்டு விழா வரை முழு விவரம் - Team India arrival