அசாம்: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தின் தவுபலில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கினார்.
-
सबके लिए खुली है मोहब्बत की दुकान,
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।🇮🇳 pic.twitter.com/Bqae0HCB8f
">सबके लिए खुली है मोहब्बत की दुकान,
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।🇮🇳 pic.twitter.com/Bqae0HCB8fसबके लिए खुली है मोहब्बत की दुकान,
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।🇮🇳 pic.twitter.com/Bqae0HCB8f
இந்த யாத்திரை கடந்த வியாழன் அன்று அசாம் மாநிலத்தில் நுழைந்தது. நியாய யாத்திரை அசாமில் நுழைந்ததிலிருந்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். பிஸ்வநாத் சாரியாலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நியாய யாத்திரையில் பொதுமக்களைப் பங்கேற்க விடாமல் அசாம் அரசு தடுப்பதாகவும், இந்தியாவிலேயே ஊழலில் அதிகம் திளைக்கும் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தான் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நேற்று (ஜனவரி 21) நகோன் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. யாத்திரையில் வந்த வாகனங்களை மறித்த பாஜகவினர் கோஷங்கள் இட்டு ராகுல் காந்தியின் யாத்திரையைத் தடுத்தனர். அப்போது பேருந்தில் இருந்த ராகுல் காந்தி தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை நோக்கிப் பறக்கும் முத்தங்கள் அளித்தார். இந்த காணொலி வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான ஸ்ரீமந்த சங்கர் தேவ் பிறந்த ஊரானா பட்டதிரவா நகோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராகுல் காந்தி அங்குச் செல்ல முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ராகுல்காந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சட்டம் ஒழுங்கு நெருக்கடியின் போது என்னால் சங்கர் தேவ் பிறந்த இடத்திற்குச் செல்ல முடியாது, ஆனால் மற்றவர்களால் செல்ல முடியும். சமயம் வரும் போது நான் சங்கர் தேவ் பிறந்த இடத்திற்குச் செல்வேன் என ராகுல் காந்தி தெரிவித்தார். முன்னதாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சங்கர் தேவ் பிறந்த இடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதாகக் கூறி ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போது தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பேசிய ராகுல் காந்தி, “என்ன பிரச்சினை அண்ணா? நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் அனுமதிக்கவில்லை? நான் தடுப்புகளைப் பார்க்கலாமா?” என வாக்குவாதம் செய்தார். பின்னர், “இன்று ஒரு நாள் யார் யார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி தான் முடிவு செய்ய வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாகவே அனுமதி பெற்றிருந்தும், சங்கர் தேவ் பிறந்த இடத்திற்கு வருவதற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், திடீரென அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.