ETV Bharat / bharat

அரிசி வாங்க முடியல.. பருப்பும் வாங்க முடியல.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்.பி! - parliament budget session 2024 - PARLIAMENT BUDGET SESSION 2024

விலைவாசி உயர்வால் ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம், ஏழைகளை பற்றி சிந்திக்காததால் தான் மத்திய பாஜக அரசு இன்று 'மைனாரிட்டி' அரசாங்கமாக இருக்கிறது என்றும் விமர்சித்து பேசினார்.

லோக்சபாவில் உரையாற்றும் காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம்
லோக்சபாவில் உரையாற்றும் காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் (Credit - Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:09 PM IST

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான (2024- 25) மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கெடுத்து பேசி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர், " உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடு என்ற சாதனையை படைத்திருப்பதாக கூறுகிறார்கள் (மத்திய அரசு). ஆனால், இந்தியாவில் ஒரு தனிநபருடைய வருமானம் 2.5 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாம் பார்க்கின்ற 80 கோடி மக்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள். அவர்களின் தனிநபர் வருமானம் மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அவர்கள் வாழும் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விலைவாசி உயர்வால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

25 கிலோ அரிசியின் விலை இன்று, 700 ரூபாயில் இருந்து 1700 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்த கோதுமையின் விலை 65 கிலோ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று ஒரு கிலோ பருப்பு 70 ரூபாய் என்ற நிலையில் இருந்து 145 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இப்படி விலைவாசி உயர்வால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.

ஏழைகளின் ஊதியமாவது உயர்ந்திருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்தபட்ச படிப்பு படித்திருப்பவர்களின் மாதாந்திர ஊதியம் 6000 ரூபாய்க்கு மேல் இல்லை என்று சொல்லலாம். பட்டதாரிகளுக்கான ஊதியம் 12 ஆயிரத்துக்கு கீழாகதான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

விவசாயிகளின் விலைப்பொருட்களுக்கு சரியாக விலை கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் உரம், பூச்சி மருத்துகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோன்று அமைப்புசாரா பணிகளில் இருக்கும் பெண்களுக்கு சரியான நேரத்தில், சரியான ஊதியம் கிடைக்கிறதா என்று சொன்னால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

நாட்டின் ஏழைகளை பற்றி சிந்திக்காத இந்த அரசாங்கத்தை மக்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக தான் பிஜேபி அரசாங்கமானது 'மைனாரிட்டி' அரசாக வந்திருக்கிறது. பாஜகவை இந்தியா கூட்டணி மைனாரிட்டி அரசாக ஆக்கியது. இந்திய மக்கள் இதனை செய்திருக்கிறார்கள். ஆந்திரா, பிகார் மாநிலத்தை போலவே பிற மாநில மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்யுங்கள்.

புதுவை மாநிலத்துக்கு நீங்கள் (மத்திய அரசு) பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறீர்கள். மாநிலத்துக்கு அதிக நிதியுதவி தருவோம் என்று கூறியிருந்தீர்கள். கல்வி வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்று கூறினீர்கள். ஆனால் புதுவைக்கு எதுவும் கிடைக்கவில்லை.

சென்ற ஆண்டு புதுவைக்கு 3,389 கோடி ரூபாய் தந்தீர்கள். இந்த ஆண்டு அதில் 120 கோடி ரூபாய் குறைவாகவே நிதி அளித்துள்ளீர்கள். புதுவை மாநிலத்தில் மின் துறை தற்போது தனியாரால் சரியான முறையில் நடத்தப்படுகிறது. இதில் எவ்வித நஷ்டமும் இல்லை. ஆகவே இதனை தனியார்மயம் ஆக்கப்படுவதை தடை செய்ய வேண்டும். மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் பேசினார்.

இதையும் படிங்க: "இது மத்திய பட்ஜெட் அல்ல; நிதீஷ் -நாயுடு பட்ஜெட்" : நாடாளுமன்றத்தில் துரை வைகோ விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.