ஹைதராபாத்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவும், 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி கேரளா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (மே 07) அசாம், பீகார், சத்தீகர், குஜராத், மேற்கு வங்காளம் உட்பட மொத்தம் 10 தொகுதிகளும், தத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் என மொத்தம் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களோடு சுமார் 1300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 07) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு குஜராத் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்திநகர் மக்களவைத் தொகுதியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
இதையும் படிங்க: இன்று 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி? முழு விபரம்! - Lok Sabha Election 2024