டெல்லி: தேர்வுகள், தேர்வினால் வரும் அழுத்தம், பயம் உள்ளிட்டவை குறித்து பரீஷா பே சார்ச்சா என்ற பெயரில் கடந்த ஆறு வருடங்களாக மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்களிடம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல லட்சம் பள்ளி மாணவர்களிடம் மோடி கலந்துரையாடுகிறார்.
அந்த வகையில், பரீஷா பே சார்ச்சா நிகழ்ச்சி 7வது ஆண்டாக இன்று (ஜன.29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி எதிர்கொள்வது என மோடி அறிவுரைகளை வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சி அனைவரும் பார்க்கும் வகையில் காணொளிக் காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் நேரடியாக பதிலளித்தார். அந்த வகையில், நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் என்பதை பெற்றோர்களுக்கு எப்படி நம்ப வைப்பது என புதுச்சேரி சேதராப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தீபஸ்ரீ பிரதமர் மோடியிடம் கேள்வியை எழுப்பினார்.
புதுச்சேரி மாணவி கேட்ட கேள்விக்கு வணக்கம், வணக்கம் எனக் கூறி பதலளிக்க தொடங்கிய மோடி, இது பெற்றோரும் ஆசிரியரும் சிந்திக்க வேண்டிய விஷயம் எனவும் நீங்கள் செய்வதாக கூறிய விஷயத்தை செய்யாமல் தவற விட்டதால் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க கூடும். நீங்கள் சொன்னதை உண்மையான மனதோடு செய்திருந்தால் உங்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் இந்நிகழ்ச்சி குறித்து, "பரீட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் நம்பிக்கையின்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்" என பதிவிட்டார். மேலும், புதுச்சேரி மாணவி கேள்வி கேட்கும் காணொளியை பகிர்ந்திருந்தார்.
-
பரீட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் நம்பிக்கையின்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் எடுத்துரைத்தார். #Pariksha_Pe_Charcha pic.twitter.com/F72HuWMVso
— K.Annamalai (@annamalai_k) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பரீட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் நம்பிக்கையின்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் எடுத்துரைத்தார். #Pariksha_Pe_Charcha pic.twitter.com/F72HuWMVso
— K.Annamalai (@annamalai_k) January 29, 2024பரீட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் நம்பிக்கையின்மையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் எடுத்துரைத்தார். #Pariksha_Pe_Charcha pic.twitter.com/F72HuWMVso
— K.Annamalai (@annamalai_k) January 29, 2024
மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடன் காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "சேதராப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தீபஸ்ரீ, பிரதமரோடு கலந்துரையாடினார்.
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான ஆர்வமும் தைரியமும் வெற்றியும் கிடைக்கும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் தார்ப்பரியம். உண்மையில் நல்ல நிகழ்ச்சி" என்று பதிவிட்டு உள்ளார்.
-
Virtually attended the #ParikshaPeCharcha2024 Program in Live telecast at Kamban Kalaiarangam,#Puducherry alongside Hon'ble Chief Minister Shri.N.Rangasamy,Hon'ble Speaker Shri.@embalamrselvam,Hon'ble Education Minister Shri.@ANamassivayam,Hon'ble Deputy Speaker Shri.Rajavelu,… pic.twitter.com/uAUtKbiEhh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Virtually attended the #ParikshaPeCharcha2024 Program in Live telecast at Kamban Kalaiarangam,#Puducherry alongside Hon'ble Chief Minister Shri.N.Rangasamy,Hon'ble Speaker Shri.@embalamrselvam,Hon'ble Education Minister Shri.@ANamassivayam,Hon'ble Deputy Speaker Shri.Rajavelu,… pic.twitter.com/uAUtKbiEhh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 29, 2024Virtually attended the #ParikshaPeCharcha2024 Program in Live telecast at Kamban Kalaiarangam,#Puducherry alongside Hon'ble Chief Minister Shri.N.Rangasamy,Hon'ble Speaker Shri.@embalamrselvam,Hon'ble Education Minister Shri.@ANamassivayam,Hon'ble Deputy Speaker Shri.Rajavelu,… pic.twitter.com/uAUtKbiEhh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 29, 2024
இதையும் படிங்க: 7 நாட்களில் நாடு முழுவதும் சிஏஏ அமல் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! சாத்தியமாகுமா?