வாஷிங்டன்: அமெரிக்காவாக இருந்தாலும், சீனாவாக இருந்தாலும் எந்த ஒரு நாடும் இன்றைக்கு உள்ள சூழலில் இந்தியாவை புறக்கணிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச வளர்ச்சிக்கான மையத்தின் சார்பில் நடைபெற்ற '80ஆவது ஆண்டில் பிரெட்டன் வூட்ஸ்: அடுத்த தசாப்தத்திற்கான முன்னுரிமைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய நிர்மலா சீத்தாராமன்,"உலகின் பெரிய ஜனநாயக நாடு, அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடு என்ற உணர்வில் இந்தியா தமது ஆதிக்கத்தை எந்த ஒரு நாட்டின் மீதும் செலுத்தாது. அதே நேரத்தில் அதன் தாக்கத்தை உலக நாடுகளுடன் விரிவாக்கம் செய்வதை மட்டுமே இந்தியா முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளது.
இன்றைக்கு உலகில் ஆறு நபர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். எனவே உங்களால் இந்தியாவின் பொருளாதாரத்தை புறக்கணிக்க முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகிறது. புவியியல் ரீதியாக மிகத்தொலைவில் உள்ள அமெரிக்கா,அண்டை நாடானா சீனா யாரும் எங்களை புறக்கணிக்க முடியாது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஏராளமான தகவல்கள், அனுபவங்கள், மனித திறன் போன்ற வளங்களைக் கொண்டுள்ளன. சர்வதேச நலனுக்காக பன்னாட்டு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. பன்முகத்தன்மைக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. எதிர்கால வளர்ச்சிகள் மீது செயல்படுவதை விடவும் சர்வதேச நலனுக்காக பிரெட்டன் வூட்ஸ் போன்ற நிறுவனங்கள் செயல்பட வேண்டும்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்