ஜம்மு காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஃப்ராசிபோரா என்னும் இடத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் இன்று (ஏப்.11) காலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. முன்னதாக, சந்தேகத்துக்குரிய குறிப்பிட்ட இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ராணுவம் மற்றும் காவல்துறை அடங்கிய கூட்டுக்குழு தேடுதல் வேட்டையைத் துவங்கி உள்ளது.
இதனையடுத்து, பயங்கரவாதிகளை நெருங்கிய நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தொடங்கி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், மேலும் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர் 2 ஆண்டுகள் நிறைவு: பொருளாதாரத்தில் அமெரிக்காவை பின்தள்ளிய ரஷ்யா! யார் காரணம்?