பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, மாண்ட்யா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் மாண்ட்யா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவரது மகன் நிகில் போட்டியிடுவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது குமாரசாமியே களமிறங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அதேபோல், ஐக்கிய ஜனதா தளத்தில் ஹசன் மற்றும் கோலார் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.
ஹசன் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி ரேவன்னா போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் கோலார் தொகுதியில் இன்னும் வேட்பாளர் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக அங்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதி இரண்டு கட்டங்களாக கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக 25 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் நீட்டிப்பு! - Kavitha Judicial Custody Extend