ETV Bharat / bharat

"இஸ்லாமியர்கள் மீதான அன்பை கூவி விற்க விரும்பவில்லை..." - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

இந்து -இஸ்லாம் என பாகுபாடு காட்டி பேசத் தொடங்கினால் தான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Prime Minister Narendra Modi (IANS Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 1:17 PM IST

வாரணாசி: மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று (மே.14) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பிரசாரக் கூட்டங்களில் ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தது குறித்து விளக்கம் அளித்தார்.

பிரசாரக் கூட்டங்களில் இஸ்லாமியர்கள் குறித்து மட்டும் தான் பேசவில்லை என்றும் அனைத்து ஏழைக் குடும்பங்கள் குறித்தும் தான் பேசியதாகவும், இந்து - இஸ்லாம் என பிரித்து பாகுபாடு காட்டி பேசத் தொடங்கினால் தான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்றும் தெரிவித்தார்.

ரதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மீதான தனது அன்பை கூவி விற்க விரும்பவில்லை என்றும் தான் வாக்கு வங்கிக்காக ஒரு போது பணியாற்ற மாட்டேன் என்றும் கூறினார். மேலும், அனைவருக்குமான நாடு எல்லோரது வளர்ச்சிக்குமானது என்பதில் தான் நம்பிக்கை கொண்டவன் என்று பிரதமர் மோடி கூறினார்.

அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் குறித்து தான் பேசியதாக வெளியான கருத்து இஸ்லாமியர்களை சுட்டுக் காட்டுவதாக வெளியானது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இஸ்லாமியர்கள் ஏன் இவ்வளவு அநியாயம் நிகழ்த்தப்படுகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலை ஏழைக் குடும்பங்களை சார்ந்தது என்றும் வறுமை இருக்கும் இடத்தில், அவர்களின் சமூக வட்டத்தைப் பொருட்படுத்தாமல், அதிக குழந்தைகள் உள்ளனர் என்றார்.

மேலும் இந்த விவகாரத்தில் தான் இந்து அல்லது முஸ்லீம் என்று யாரையும் குறிப்பிடவில்லை என்றும் ஒருவர் எவ்வளவு குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தான் கூறியதாகவும் அதேநேரம் உங்கள் குழந்தைகளை அரசு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை வர வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் முதலமைச்சராக இருந்த போது கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என எதிர்த் தரப்பினர் சதி செய்ததாக கூறினார். இந்த பிரச்சினை இஸ்லாமியர்களை பற்றியது அல்ல என்று பிரதமர் தெரிவித்தார்.

தனிப்பட்ட விதத்தில் இஸ்லாமியர்கள் தனக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தாலும், அவர்களுக்கு இதை செய், அதை செய் என்று கட்டளையிடும் எண்ண அலை உள்ளதாகவும், தன் வீட்டில், தன்னைச் சுற்றி எல்லா இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். தனது வீட்டிலும் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும், மேலும் பல பண்டிகைகள் தனது வீட்டில் கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஈத் பண்டிகையின் போது தனது வீட்டில் உணவு சமைக்கப்படுவதில்லை என்றும் அன்றைய தினம் அனைத்து இஸ்லாமிய நண்பர்களிடம் இருந்து தனது வீட்டுக்கு உணவு வரும் என்றார். அதேபோல் முகராம் பண்டிகை தினத்திலும் இஸ்லாமியர் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியதாகவும் அப்படிபட்ட சூழலில் இருந்து வந்தவன் தான் தான் என்றும் பிரதமர் குறிப்பிட்டர்.

இன்றளவும் தனது நண்பர்கள் வட்டாரத்தில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் 2002 குஜராத் கலவரத்திற்கு பின் இஸ்லாமியர்கள் மத்தியில் தனது பெயர் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

மேலும், தான் இந்து - இஸ்லாம் என பாகுபாடு காட்டத் தொடங்கினால், பொது வாழ்வில் வாழத் தகுதி பெற மாட்டேன் என்றும் ஒருபோதும் இந்து-இஸ்லாம் என அரசியல் செய்ய மாட்டேன், அது எனது உறுதிமொழி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: சொந்தமாக கார், வீடு இல்லை.. ஆனாலும் பிரதமர் மோடிக்கு இவ்வளவு சொத்துக்களா? - PM Modi Assest List

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.