ETV Bharat / bharat

செமினார் ஹாலில் பெண் மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. கொலைக்கு பின் தூங்கிய அரக்கன்.. கொல்கத்தாவை உலுக்கிய வழக்கு! - kolkata doctor murder case - KOLKATA DOCTOR MURDER CASE

kolkata doctor murder case accused: கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் சம்பவத்தன்று சாவகாசமாக வீட்டுக்கு சென்று தூங்கியதாக தெரிய வந்துள்ளது.

கைதான சஞ்சய் ராய்
கைதான சஞ்சய் ராய் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 6:20 PM IST

Updated : Aug 12, 2024, 6:38 PM IST

கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த அந்த மாணவி பயிற்சி மருத்துவராக பணியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள செமினார் ஹாலில் அவர் அரை நிர்வாணத்தில் உடல் முழுக்க காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனே மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.

பின்னர் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.

அதன்படி, பிரேத பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ''சம்பவத்தன்று பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு சஞ்சய் ராய் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, ஆதாரங்களை அழிப்பதற்காக அவர் உடுத்தியிருந்த துணிகளை துவைத்துப் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். சஞ்சய் ராயை பிடிக்க சென்றபோது அவரது காலணிகளில் இரத்த கறை இருந்தது கண்டுபிடித்து அவரை கைது செய்தோம்'' என தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை: கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கழுத்து, கண்கள், வாய், அந்தரங்க பகுதி, உதடு, இடது கால், மோதிர விரல் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இருப்பினும், அவர் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பு கொல்லப்பட்டாரா அல்லது அதற்கு பிறகா என்ற தகவல் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும் என காவல்துறை கூறுகிறது.

பயிற்சி பெண் மருத்துவரின் இக்கொடூர கொலையை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சரியான பாதுகாப்பு இல்லாததை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினை சரி செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் முடிவு செய்துள்ளனர். இதனால், கர் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விழுந்து மடிந்த பெண்கள்.. பீகார் சித்தநாத் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி..!

Last Updated : Aug 12, 2024, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.