ETV Bharat / bharat

நாளை கூடுகிறது மழைக்கால கூட்டத் தொடர்! பட்ஜெட் தாக்கலில் சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்! - Parliament Monsoon session - PARLIAMENT MONSOON SESSION

நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Etv Bharat
Union Finance Minister Nirmala Sitharaman (File Photo/Sansad TV)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 10:39 AM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை.22) கூடுகிறது. ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 7வது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதன் மூல சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்கிற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

இதற்கு முன் மொராஜி தேசாய் ஆறு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். 1959 முதல் 1964 ஆண்டு வரை மொராஜி தேசாய் 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்கிறார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யபட உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக பொருளாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் அலோசனை நடத்தினர்.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு 1934ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விமானச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய வாயுயன் விதேயக் (Bhartiya Vayuyan Vidheyak) சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கொதிகலன்களின் பாதுகாப்பு குறித்த 1923ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய கொதிகலன் மசோதாவுக்கு பதிலாக புதிய பாய்லர் மசோதா, காபி மற்றும் ரப்பர் உற்பத்தி குறித்த ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த மசோதாக்களை பட்டியலிடுவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான வணிக வழிகாட்டு நெறிமுறைக் குழு ஆலோசனைக் குழு மேற்கொள்கிறது. மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அமைதியான முறையில் கூட்டத் தொடரை நடத்தி முடிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு வேலை மோகத்தில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிய இந்தியர்கள்: 14 இந்தியர்கள் கம்போடியாவில் மீட்பு! - 14 indians rescue in cambodia

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.