ஹைதராபாத்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் ஒடிசாவின் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கும் இடையே வியாழக்கிழமை (அக்.24) இரவு கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், எதிர்திசையில் தென்மாநிலங்களில் இருந்து ஒடிசா, மேற்கு வங்கத்துக்கும் இயக்கப்படும் 28 விரைவு, அதிவிரைவு ரயில்கள் நாளை(அக்.23) மற்றும் நாளை மறுநாள் (அக்.24) ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரத்தாகும் ரயில்கள் விவரம்:
ரயில் எண் | புறப்படும் இடம் | சேருமிடம் | ரத்தாகும் தேதி |
22603 | கராக்பூர் | விழுப்புரம் | அக். 24 |
12841 | ஷாலிமார் | சென்னை சென்ட்ரல் | அக். 24 |
12663 | ஹவுரா | திருச்சிராப்பள்ளி | அக்.24 |
12839 | ஹவுரா | சென்னை சென்ட்ரல் | அக்.24 |
06090 | சந்த்ராகாச்சி | சென்னை சென்ட்ரல் | அக்.24 |
22504 | திப்ரூகர் | கன்னியாகுமரி | அக்.23 |
12840 | சென்னை சென்ட்ரல் | ஹவுரா | அக்.23 |
12868 | புதுச்சேரி | ஹவுரா | அக்.23 |
22826 | சென்னை சென்ட்ரல் | ஷாலிமார் | அக்.23 |
12897 | புதுச்சேரி | புவனேஸ்வர் | அக்.23 |
12842 | சென்னை சென்ட்ரல் | ஹவுரா | அக்.24 |
22808 | சென்னை சென்ட்ரல் | சந்த்ராகாச்சி | அக்.24 |
06095 | தாம்பரம் | சந்த்ராகாச்சி | அக்.24 |
06087 | திருநெல்வேலி | ஷாலிமார் | அக்.24 |
22606 | திருநெல்வேலி | புருலியா | அக்.23 |
06089 | சென்னை சென்ட்ரல் | சந்த்ராகாச்சி | அக்.23 |
22503 | கன்னியாகுமரி | திப்ரூகர் | அக்.23 |
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 17 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் உட்பட மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTES/ IRCTC இணையதளம் மற்றும் செயலியில் பயணிகள் அறியலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.