ETV Bharat / bharat

முஸ்லிம் லீக் விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்! - Lok Sabha Election 2024

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சித்தாந்தங்களை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:28 PM IST

Updated : Apr 9, 2024, 12:55 PM IST

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சிந்தாந்தத்தை கொண்டது என பிரதமர் மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "தானும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா, குர்தீப் சப்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மீது இரண்டு புகார்கள் உள்பட 6 புகார்களைக் கொடுத்துள்ளோம்" என்று பதிவிட்டு உள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார்களை வெளியிட்ட ஜெய்ராம் ரமேஷ், அதில், "தேர்தல் வேளையில் அனைத்து கட்சிகளின் சமத்துவத்தை உறுதி செய்வதில் தனது சுதந்திரமான அதிகாரத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. தேர்தல் ஆணையம் அதன் அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தும் என்று நம்புகிறோம்.

எங்களது தரப்பில் இருந்து நாங்கள் இந்த பாஜக ஆட்சியினை மக்கள் முன் அம்பலப்படுத்த அரசியல், சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது பாஜகவின் நோக்கம் மற்றும் அந்த பணி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

மேலும் காஷ்மீரை பிரித்தாளும் எண்ணம் கொண்டவர்கள் வீசிய கற்களை, கொண்டு விக்சித் ஜம்மு காஷ்மீரைக் கட்டத் தொடங்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். பாஜக அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுவதாகவும் எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்காக 10 ஆண்டுகள் உழைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்கள் 100 சதவீதம் பயனடைய வேண்டும் என்றும் அதுதான் உண்மையான மதச்சார்பினை மற்றும் சமூக நீதி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதை தடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் கூட்டணியில் போட்டியிடுகின்றன என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் சித்தாந்தங்களை பிரதிபலிப்பதாகவும், இடதுசாரிகளின் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதையும் படிங்க : "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 9, 2024, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.