ETV Bharat / bharat

தெருக்கூத்து கட்டும் சென்னை மருத்துவர்! - Street theatre

Therukoothu: புதுச்சேரியில் நடைபெற்ற தெருக்கூத்தில் ஆர்வமுடன் பங்கேற்று அசத்திய சென்னை மருத்துவர், கூத்து கட்டுவது தனக்கு மனநிறைவை அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

chennai doctor who participated in the Street theatre held in Puducherry
புதுச்சேரியில் நடைபெற்ற தெருக்கூத்து நாடகத்தில் பங்கேற்ற சென்னை மருத்துவர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 1:05 PM IST

புதுச்சேரியில் நடைபெற்ற தெருக்கூத்து நாடகத்தில் பங்கேற்ற சென்னை மருத்துவர்

புதுச்சேரி: நம் முன்னோர்களின் சிந்தனைகள், எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட அனைத்தையும் நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறிய முடிகிறது. இக்கலைகளே நம் சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. அதில் ஒன்றுதான் தெருக்கூத்து. சினிமாவுக்கு நிகராக இருந்து வந்த இந்த தெருக்கூத்து கலை, கோயில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய ஊர் திருவிழாவின்போது விடிய விடிய மக்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் கலையாகும்.

ஆனால், தற்போது இந்த தெருக்கூத்து, காலத்தின் மாற்றத்தினால் நிலைத்து நிற்க முடியாமல் அழிந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு அழிந்து வரும் தெருக்கூத்து கலையை மக்களிடம் தொடர்ந்து உயிரூட்டும் விதமாக யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும், 10 நாட்கள் தெருக்கூத்து பயிற்சி பட்டறை புதுச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்பயிற்சி பட்டறையின் இறுதி நாளான நேற்று (பிப்.5), வீரவாள் அபிமன்யு என்ற தலைப்பில் முருங்கம்பாக்கம் கைவினை கிராமத்தில் தெருக்கூத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளான தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில், இந்த தெருக்கூத்தை புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்து பயிற்சி பட்டறையில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவர்தான் மருத்துவத் துறையைச் சார்ந்த இளைஞர் டாக்டர் விக்னேஷ். இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவப் பணியை பார்த்துக்கொண்டு வரும் இவர், தற்போது புதுச்சேரியில் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்றுள்ளது, தெருக்கூத்து பயிற்சி பெற்று வரும் மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூறிய மருத்துவர் விக்னேஷ், "நான் சென்னையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறேன். புதுச்சேரியில் நடக்கும் இந்த தெருக்கூத்து பயிற்சி பட்டறையைப் பற்றி அறிந்து, கடந்த 10 நாட்களாக இங்கு தங்கி பயிற்சி பெற்று வருகிறேன். சிறுவயது முதலே எனக்கு இந்தக் கலையின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அது என்னுள் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையாக மெல்ல துளிர் விடத் தொடங்கியது.

தற்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் இன்று கிருஷ்ணர் வேடம் போட்டுள்ளேன். இது எனக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்துள்ளது. மருத்துவப் பணியில் எனக்கிருந்த வேலைகளால், மிகுந்த உளைச்சலில் இருந்தேன். ஆனால், இந்த கூத்து கட்டிய பிறகு மாற்றத்தை உணர்ந்தேன். நான் வேஷம் போட்டு, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தது, எனக்கு புத்துணர்வு மட்டுமின்றி, மனநிறைவாகவும் உள்ளது.

மக்களிடம் இருந்து வரும் கைத்தட்டல், என்னை மேலும் இந்த தெருக்கூத்தில் பங்கேற்க உற்சாகப்படுத்துகிறது. எனக்கு இதில் மன நிறைவு கிடைத்துள்ளது. தெருக்கூத்து கலை மற்றும் மருத்துவம் எனக்கு இரண்டு கண்கள் போன்றது. மருத்துவனாக இருந்து, கூத்து நாடகத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்" - அமைச்சர் சேகர்பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.