ETV Bharat / bharat

வரலாற்றில் முதல்முறை.. ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்துக்கு அனுமதி! - IRS Officer Gender Change

Gender Change: ஹைதராபாத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

author img

By PTI

Published : Jul 10, 2024, 4:06 PM IST

அனுகதிர் சூர்யா
அனுகதிர் சூர்யா (Credits - ETV Bharat)

ஹைதராபாத்: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப்பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என ஆணாக மாறியுள்ளார். அவரது பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாலின மாற்றம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை அமைச்சகம் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும், எம்.அனுகதிர் சூர்யா என அவர் அறியப்படுவார் என்று மத்திய வருவாய்த்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அனுசுயா கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் உதவி ஆணையராக தனது பணியைத் தொடங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளநிலை பட்டம் பெற்றவர். அதன்பின், தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் சைபர் தடயவியல் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் NALSA வழக்கில் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தது. பாலின அடையாளம் என்பது தனிநபரின் விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்தச் சூழலில் பாலின மாற்றத்தை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: விவாகரத்தான முஸ்லிம் பெண் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க முடியும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - muslim woman maintenance case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.