டெல்லி: சிபிஎஸ்இ அடிப்படையிலாக கல்வியை வழங்கும் பள்ளிகள், இந்த வாரியம் அமைத்திருக்கும் நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம். இந்நிலையில், சில பள்ளிகள் இவற்றைப் பின்பற்றவில்லை எனப் புகார்கள் எழுந்தது. இதனால், வாரியத்தின் கல்வி அலுவலர்கள் இப்பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டிருந்தனர். ஆனால், அவற்றை சரிவர வழங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை CBSE தலைமை ரத்து செய்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் சிபிஎஸ்இ கல்வி பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த கல்வி முறையை நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று பயிற்றுவிக்கின்றன. இதில் சிலப் பள்ளிகளில் சரியான மாணவர்கள் எண்ணிக்கை இல்லை எனவும், போலியாக நடத்தப்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த சூழலில், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 27 பள்ளிகளுக்கு நேரடியாக சென்ற சிபிஎஸ்இ அலுவலர்கள், அப்பள்ளிகளிடம் 30 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, ‘ஷோ காஸ் நோட்டிஸ்’ அனுப்பியது. இதனைத் தொடர்ந்து 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.
பிணையில்லாக் கல்விக் கடன் - பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
சிபிஎஸ்இ அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்ட பள்ளிகளில் போதுமான மாணாக்கர் இல்லை என்பதும், இருக்கும் மாணவர்கள் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், 6 பள்ளிகளை மேல்நிலைப் பள்ளி தரத்தில் இருந்து உயர்நிலை பள்ளிகளாக தரமிறக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 21 பள்ளிகளின் விவரங்கள் கீழ்வருமாறு காணலாம்.
பள்ளியின் பெயர் | முகவரி |
கேமோ தேவி பப்ளிக் ஸ்கூல் | நரேலா, டெல்லி-110040 |
தி விவேகானந்த் ஸ்கூல் | நரேலா, டெல்லி-110040 |
சந்த் ஞானேஷ்வர் மாடல் ஸ்கூல் | அலிபூர், டெல்லி-110036 |
பி.டி. மாடல் செகண்டரி ஸ்கூல் | சுல்தான்புரி ரோடு-110041 |
சித்தார்த்தா பப்ளிக் ஸ்கூல் | நார்த் வெஸ்ட் டெல்லி-110081 |
ராகுல் பப்ளிக் ஸ்கூல் | டெல்லி-110086 |
பிரின்ஸ் உச் மத்யாமிக் வித்யாலயா | ராஜஸ்தான் - 332001 |
பார்தி வித்யா நிகோத்தன் பப்ளிக் ஸ்கூல் | டெல்லி - 110041 |
யு.எஸ்.எம் பப்ளிக் செகண்டரி ஸ்கூல் | டெல்லி - 110041 |
ஆர்.டி. இண்டர்நேஷனல் ஸ்கூல் | டெல்லி - 110043 |
ஹீரா லால் பப்ளிக் ஸ்கூல் | டெல்லி - 110081 |
பி.ஆர். இண்டர்நேஷனல் ஸ்கூல் | டெல்லி - 110039 |
லார்டு புத்தா பப்ளிக் ஸ்கூல் | ராஜஸ்தான் - 325003 |
எஸ்.ஜி.என் பப்ளிக் ஸ்கூல் | டெல்லி - 110041 |
எம்.டி. மெமோரியல் பப்ளிக் ஸ்கூல் | டெல்லி - 678594 |
எல்.பி.எஸ் கான்வென்ட் ஸ்கூல் | ராஜஸ்தான் - 325003 |
ஹன்ஸ்ராஜ் மாடல் ஸ்கூல் | டெல்லி - 110086 |
ஷிவ் ஜோதி கான்வென்ட் சீனியர் செகண்டரி ஸ்கூல் | ராஜஸ்தான் - 324010 |
வித்ய பாரதி பப்ளிக் ஸ்கூல் | ராஜஸ்தான் - 332001 |
கே.ஆர்.டி. இண்டர்நேஷனல் ஸ்கூல் | டெல்லி - 110073 |
எம்.ஆர். பார்தி மாடல் சீனியர் செகண்டரி ஸ்கூல் | டெல்லி - 110041 |
சர்வதேச தரத்தில் கல்வியை மாணாக்கர்களுக்கு வழங்க சிபிஎஸ்இ வாரியம் பல ஏற்பாடுகளை செய்துவருகிறது. கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும், தரமான கல்வியை வழங்குவதற்கும், மாணவர்களின் முழுமையான திறனை வளர்ப்பதற்கும் பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் சிதைக்கும் வகையில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சிபிஎஸ்இ தலைமை அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.