ETV Bharat / bharat

'புதிய அரசு அமைந்த உடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' - பிரதமர் மோடி பேட்டி - Delhi news

PM Modi: தேர்தலுக்குப் பின் புதிய அரசு அமைந்த உடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என டெல்லியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi speech about Budget Session 2024
பிரதமர் மோடி பட்ஜெட் 2024 குறித்து பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 11:09 AM IST

Updated : Jan 31, 2024, 11:30 AM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, 'ராம் ராம்' எனக் கூறியபடி தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், 'குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழிகாட்டுதலின் படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும், இந்த பட்ஜெட் மகளிருக்கான சக்தியாக இருக்குமெனவும், இந்த சந்தர்ப்பத்தை எந்த உறுப்பினர்களும் தவறவிடாதீர்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், புதிய அரசு அமைந்த உடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடரை யாரும் புறக்கணிக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது' எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Last Updated : Jan 31, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.