சத்தீஸ்கர்: விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம் “ஒரே கூரையின் கீழ் கணவர் மனைவி ஒன்றாக வாழ்ந்தாலும், உரிய காரணமின்றி மனைவி தனி அறையில் வசிப்பது கணவருக்கு மன வேதனையை அளிக்கும்” என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக கணவர், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்த நிலையில், கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், விவாகரத்து வழங்கி பிலாஸ்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கணவர் தாக்கல் செய்த மனுவில், மனைவி தன்னிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். நாளுக்கு நாள் தம்பதியின் சண்டை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், குடும்பத்தினர் சண்டையை தீர்க்க முற்பட்டனர்.
எனது மனைவியின் பிடிவாதத்தால் தீர்வு எட்டப்படவில்லை. இருவரும் தனித்தனி அறைகளில் தனித்தனியாக வாழத் தொடங்கினோம். எனது வாழ்நாள் முழுவதையும் இப்படியே கழிக்க விருப்பமில்லை. எனவே, இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13-ன் கீழ் விவாகரத்து பெற” வழக்கு தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அவரது மனைவியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அக்டோபர் 2021 வரை அவர்கள் இருவரும் நிம்மதியாக வாழ்ந்ததாகவும், தன்னை தனது மைத்துனியுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகிப்பதாகவும், அந்த குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கேட்ட நீதிபதி, மனைவி சிறுசிறு விஷயங்களுக்காக அடிக்கடி கணவரிடம் சண்டையிட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், மனைவியின் நடத்தையால் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் போனது என்று தெரிவித்து இருவருக்கும் விவாகரத்து வழங்கினார்.
இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்துக்காக பிச்சைக்காரர் கொலை.. சதித்திட்டம் தீட்டிய கணவன் மனைவி சிக்கியது எப்படி? - Accident Drama For Insurance Money