ETV Bharat / bharat

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு.. இடது புருவத்தில் பலத்த காயம்! - Jagan Reddy injured - JAGAN REDDY INJURED

jagan mohan reddy: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரையின் போது அடையாளம் தெரியாத நபர் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 10:56 PM IST

விஜயவாடா: ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று விஜயவாடாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடைபெற்ற வாகன பேரணியின் போது அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

உடனடியாக பரப்புரை பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜெகன் மோகன் தனது பேரணியை தொடர்ந்தார்.

இந்த கல்வீச்சு சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி(TDP) இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு"- ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.