ETV Bharat / bharat

உயர் கல்வியில் முனைவர் பட்டம் பெறும் பெண்கள்; முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு.. ஆய்வறிக்கை முடிவு கூறுவது என்ன? - latest tamil news

All India Survey On Higher Education: 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE - All India Survey On Higher Education) கடந்த ஜன.25 ஆம் தேதி வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை இத்தொகுப்பில் காணலாம்.

உயர்கல்வியில் பெண்கள் தான் முன்னிலை; உயர்கல்வி ஆய்வறிக்கை தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 9:58 PM IST

சென்னை: 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE - All India Survey On Higher Education) கடந்த ஜன.25 ஆம் தேதி வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை இத்தொகுப்பில் காணலாம்.

மாணவர் சேர்க்கை: 2021 - 2022 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுவதிலும் 4.33 கோடி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். உயர்கல்வி நிறுவனத்தில் மாணவர்களின் சேர்க்கை என்பது கடந்த 2020 - 2021 மற்றும் 2014 - 2015 ஆண்டுகளில் 4.14 கோடியாகவும், 3.42 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொருத்தமட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 69.73 இலட்சம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 45.78 இலட்சம் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், தமிழ்நாட்டில் 33.09 இலட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மத்தியப் பிரதேசம் (28 இலட்சம் மாணவர்கள்), மேற்கு வங்கம் (27.22 இலட்சம் மாணவர்கள்), ராஜஸ்தான் (26.89 இலட்சம் மாணவர்கள்) அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. மொத்த மக்கள் தொகையில் 18 வயது முதல் 23 வயதுடையவர்கள், 51.4 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில் உள்ளனர்.

கல்லூரிகள் கணக்கெடுப்பு: உத்தர பிரதேசத்தில் 8 ஆயிரத்து 375 கல்லூரிகள் உள்ள நிலையில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 4 ஆயிரத்து 692 கல்லூரிகளை கொண்ட மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், 4 ஆயிரத்து 430 கல்லூரிகளைக் கொண்ட கர்நாடகா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களை ராஜஸ்தான் (3 ஆயிரத்து 934 கல்லூரிகள்), தமிழ்நாடு (2 ஆயிரத்து 829 கல்லூரிகள்), மத்திய பிரதேசம் (2 ஆயிரத்து 742 கல்லூரிகள்), ஆந்திர பிரதேசம் (2 ஆயிரத்து 602 கல்லூரிகள்), குஜராத் (2 ஆயிரத்து 395 கல்லூரிகள்), தெலங்கானா (2 ஆயிரத்து 83 கல்லூரிகள்), மேற்கு வங்கம் ( ஆயிரத்து 514 கல்லூரிகள்) பிடித்துள்ளன.

பெண்களின் சேர்க்கை விகிதம் அதிகம்: உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 - 2015 ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்பிடும் போது, 2021 - 2022 ஆம் ஆண்டில் பெண்களின் சேர்க்கை 32 சதவீதம் அதிகரித்து, 2 கோடியே 6 இலட்சத்து 91 ஆயிரத்து 792 ஆக உயர்ந்துள்ளது. 2017 - 2018 இல் பெண்களின் சேர்க்கை 18.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேரளா, தெலங்கானா, ஹரியானா, அசாம், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மேகாலயா மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

பிஎச்.டி சேர்க்கையிலும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி படிப்பில் 47 ஆயிரத்து 717 பெண்கள் சேர்ந்துள்ளனர். 2021- 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த முனைவர் படிப்புக்கான சேர்க்கை 2.12 இலட்சமாக உள்ளது. இதில் 98 ஆயிரத்து 636 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம்: இந்தியா முழுவதிலும் உள்ள மொத்த இளங்கலை படிப்பில், 34.2 சதவீதம் பேர் அதாவது 1.13 பேர் இளங்கலை (BA) படிப்பில் சேர்ந்துள்ளனர். 14.8 சதவீதம் பேர் அறிவியல் (BSc), 13.3 சதவீதம் பேர் வணிகம் (B.com), 11.8 சதவீதம் பேர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இத்தரவில் இருந்து 2021 - 2022 காலக்கட்டத்தில் அதிகப்படியான மாணவர்கள் இளங்கலை (BA) படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதை அறியலாம்.

ஆசிரியர்கள் கணக்கெடுப்பு: 2021 - 2022இல் 15 இலட்சத்து 97 ஆயிரத்து 688 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அதில் 56.6 சதவீதம் ஆண் ஆசிரியர்கள், 43.4 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இவர்களில் 5.6 சதவீதம் அதாவது 89 ஆயிரத்து 770 பேர் இஸ்லாமிய சிறுபான்மையின ஆசிரியர்கள். மேலும் 8.8 சதவீதம் அதாவது ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 205 பேர் சிறுபான்மையின ஆசிரியர்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மொத்த ஆசிரியர்களில் 13.1 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 11.2 சதவீதம் பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 10.5 சதவீதம் பேர் மகாராஷ்டிராவையும், 9.4 சதவீதம் பேர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள். மொத்த முஸ்லீம் சிறுபான்மை ஆசிரியர்களில் 12.9 சதவீதம் பேர் உத்தர பிரதேசத்தையும், 10.4 சதவீதம் பேர் கர்நாடகாவையும், 9.6 சதவீதம் பேர் கேரளாவையும், 9.5 சதவீதம் பேர் மகாராஷ்டிராவையும், 8.2 சதவீதம் பேர் தெலங்கானாவையும் சேர்ந்தவர்கள். மற்ற சிறுபான்மையின ஆசிரியர்களில் 19.2 சதவீதம் பேர் தமிழ்நாட்டையும், 17.5 சதவீதம் பேர் பஞ்சாப்பையும் சேர்ந்தவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டம் பெற்றவர்களின் கணக்கெடுப்பு: கணக்கெடுக்கப்பட்ட 2021 - 2022 கல்வியாண்டில், 1.07 கோடி மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி, முனைவர், டிப்ளமோ படிப்புகளில் பட்டம் பெற்றதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் 54.6 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பரீக்ஷா பே சர்ச்சா 2024: பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.