ETV Bharat / bharat

மக்களவை தேர்தல்: காங்கிரஸ் 11வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கடப்பாவில் ஒய்எஸ் ஷர்மிளா போட்டி! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Congress Candidates List: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 17 வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட 11வது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 5:02 PM IST

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 17 வேட்பாளர்கள் கொண்ட 11வது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ் ஷர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திர பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் முகமது ஜாவத் மற்றும் தரிக் அன்வர் ஆகியோர் பீகாரின் கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹர் ஆகிய தொகுதிகளில் களம் காணுகின்றனர். அதேபோல் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ் ஷர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேபோல் முன்னாள் மத்தி கல்வி அமைச்சர் எம்எம் பல்லம் ராஜூ காகிநாடா மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், ஆந்திராவில் 5 தொகுதிகளிலும், பீகாரில் மூன்று மற்றும் மேற்கு வங்கத்தில் ஒன்று என மொத்த 17 வேட்பாளர்கள் அடங்கிய 11வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

பீகாரில் முகமது ஜாவத் மற்றும் தரிக் அன்வர் ஆகியோரை தவிர்த்து பாகெல்பூரில் எம்.எல்.ஏ அஜீத் சர்மா களம் காணுகிறார். இதுவரை காங்கிரஸ் கட்சி 228 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இருப்பினும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரபேரலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சஸ்பென்ஸ் காட்டி வருகிறது.

இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சங்கிற்கு ஜாமீன்! உச்ச நீதிமன்றம் உத்தரவு! - MP Sanjay Singh Got Bail

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.