ETV Bharat / bharat

சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ்.. கலையுலக வித்தகராக உருவான வரலாறு! - Ramoji Rao history

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 1:52 PM IST

RAMOJI RAO HISTORY: ராமோஜி குழுமத்தின் தலைவர் செருகுரி ராமோஜி ராவ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. கலையுலக வித்தகராக அறியப்படும் ரமோஜி ராவ் கடந்த வந்த பாதை குறித்து இச்செய்தி விவரிக்கிறது.

ராமோஜி ராவ்(கோப்புப்படம்)
ராமோஜி ராவ்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat)

ஹைதராபாத்: உலகில் எத்தனை ஊடக நிறுவனங்கள் இருந்தாலும் அத்துறையின் மீது ராமோஜி ராவ் கொண்டு இருந்த பார்வை என்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. ஊடகத் துறையின் மூலம் இனம் மற்றும் மொழி என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்திய உண்மையான பத்திரிகையாளர் ராமோஜி ராவ்.

ஈநாடு, ஈடிவி, ஈடிவி பாரத் ஆகிய அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் என மும்முனைகளிலும் இருந்து உண்மை நிலவரங்களை மக்களின் விரல் நுனிக்கு கொண்டுச் சென்ற வித்தகர் ரமோஜி ராவ். எத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அத்துறையில் இதுவரை கண்டிராத பரபரப்பையும் உச்சத்தையும் அடையச் செய்யக் கூடியவர் ராமோஜி ராவ். பல சோதனைகள் மூலம் ஊடகத்துறையில் புதிய சாகசங்களை செய்த போராளி ராமோஜி ராவ்.

சமூக விழிப்புணர்வு கருவியாக ஊடகத் துறையை மாற்றியவர்: ஊடகம் என்பது தொழில் அல்ல மாறாக சமுதாயத்தை விழிப்புணர்வுடன் வைத்திருக்கக் கூடிய ஒன்று. அதையே நம்பிக்கையாக கொண்டு இருந்தவர் ராமோஜி ராவ். கடந்த 1969ஆம் ஆண்டு "அன்னதாதா" என்ற மாத இதழ் மூலம் ஊடகத்துறையில் காலடி எடுத்து வைத்த ராமோஜி ராவ், தனது தொடக்க பயணத்தை விவசாயத்திற்கான விழிப்புணர்வாக எடுத்துச் சென்றார்.

எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராமோஜி ராவ், தனது "அன்னதாதா" மாத பத்திரிகை மூலம் சர்வதேச அளவில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிகள், புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள், சாகுபடி முறைகள் உள்ளிட்டவைகளை வெளியிட்டு விவசாயிகளிடையே புரட்சியை ஏற்படுத்தினார். அன்னதாதா பத்திரிகையில் வெளியான தகவல்களை கொண்டு சோதனை முயற்சியில் ஈடுபட்ட கோடிக்கணக்கான தெலுங்கு விவசாயிகள், அதில் கணிசமான வெற்றியை பெற வித்திட்டவர் ராமோஜி ராவ்.

ஈநாடு உருவான வரலாறு: கடந்த 1974ஆம் ஆண்டு ஊடகத் துறையில் தனது அடுத்தபடியாக ஈநாடு தினசரி தெலுங்கு நாளிதழை தொடங்கினார் ராமோஜி ராவ். தற்போது ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களில் நம்பர் ஒன் செய்தி நாளிதழாக ஈநாடு விளங்குகிறது. மேலும், தெலுங்கு மொழியை வளர்க்கும் பணியில் ஈடுபட்ட ராமோஜி ராவ் அதற்கென நிபுணர் குழுவை அமைத்து தெலுங்கு மொழிக்கு உரிய சொற்களை உருவாக்கினார்.

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதன் மீது அதிக பற்று கொண்டு இருந்தவர் ராமோஜி ராவ். அதன் காரணமாகவே பொதுப் பிரச்சினைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த ஈநாடு செய்தி நிறுவனம், உண்மையின் மீது கொண்டு இருந்த விசுவாசத்தின் எதிரொலிப்பாய் திகழ்ந்ததன் காரணமாக கோடிக்கணக்கான தெலுங்கு வாசகர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது.

1976 முதல் பாதியில் 48 ஆயிரத்து 339 பிரதிகளாக இருந்த ஈநாடு பத்திரிகை விற்பனை மெல்ல அதிகரித்து 2011 ஆம் ஆண்டுவாக்கில் எட்ட முடியாத விற்பனையை அடைந்தது. கரோனா தொற்றுநோய் காலத்தில் செய்தித்தாள்களின் நிலை குறித்த கேள்வி எழுந்த போதிலும் அவை அனைத்தையும் சிதைத்து இன்று 23 மையங்களில் அச்சிடப்பட்டு அதிக புழக்கத்தில் உள்ள தெலுங்கு நாளிதழாக வெளியிடப்படுகிறது ஈநாடு பத்திரிகை.

செய்திகளை வழங்குவதில் புதுமை: விடியும் முன் உண்மை உரைக்கட்டும் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தியவர் ராமோஜி ராவ். இந்த கோட்பாடு மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு செய்தி நாளிதழ்களும் புது பாதையை கண்டது. கடந்த ஆண்டுகளில் பொது மக்களுக்கும் செய்தித் தாள்களுக்கும் இடையிலான இடைவெளி என்பது நீண்டதாக காணப்பட்டது.

பொது மக்கள் அனைவரும் மெனக்கெட்டு செய்தித் தாள்களை தேடிச் சென்று வாங்கும் நிலை இருந்த நேரம் அது. அதை உடைத்தெறிந்த ராமோஜி ராவ், தனியே ஏஜெண்டுகள், ஊழியர்கள் என்ற கட்டமைப்பை உருவாக்கி விடியும் முன்னரே வீடுகளுக்கே சென்று வாசகர்களின் கைகளிலே செய்தித் தாள்கள் ஒப்படைக்கும் நடைமுறையை கொண்டு வந்தார்.

தேசிய மற்றும் சர்வதேச செய்திகள், தலைவர்களின் அறிவிப்புகள், பொதுக் கூட்டங்களின் பேச்சுகள் என செய்தித் தாள்களை அலங்கரித்த நிலையில், நாளிதழ்களில் இடம் பெறும் செய்தி என்பது அரசு வெளியிடும் அறிவிப்புகளின் பிரதியாக மட்டும் இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ராமோஜி ராவ், கிராமப் புறங்களிலும், கடைக்கோடியில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரக் கூடிய பாமர மக்களின் பிம்பமாக இருக்க வேண்டும் என்பதை தனது நோக்கமாக கொண்டு இருந்தார்.

அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்த அவர், அதற்கேற்ப, உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இதழ் துவங்கியதில் இருந்தே செய்து காட்டியும் வந்தவர். அன்று முதல் இன்று வரை உள்ளூர் மக்களின் வாழ்க்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது ஈநாடு நாளிதழ்.

தெலுங்கு மக்களின் சுயமரியாதையாக திகழ்ந்த ஈநாடு: ஈநாடு என்பது சாதாரண செய்தித் தாளாக இல்லாமல் தெலுங்கு மக்களின் சுயமரியாதை அடையாளமாக எதிரொலித்தது. 1978 முதல் 1983 வரையிலான ஐந்து ஆண்டுகால் ஆந்திர பிரதேச ஆட்சியில் நான்கு முறை முதலமைச்சரை மாற்றியமைத்தது காங்கிரஸ் கட்சி. அப்போது, ​​தெலுங்கு தேசத்தின் சுயமரியாதையை காக்கும் புதிய அரசியல் சக்தியாக தெலுங்கு தேசம் உருவானதை மக்கள் வரவேற்றனர்.

கடந்த 1983 சட்டமன்றத் தேர்தலுக்கு பின், ராமோஜி ராவ் தனது தலையங்கத்தில், சர்வாதிகாரத்தை எதிர்ப்பதே நோக்கம் என்றும், தெலுங்கு தேசத்துடன் நாங்கள் நிற்போம் என்றும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், நல்லது செய்தால் பாராட்டுவோம் என்றும், தவறு செய்தால் எச்சரிப்போம் என்றும் எழுதி இருந்தார்.

என்டிஆர் ஆட்சியில் செய்த தவறுகளை ஈநாடு அச்சமின்றி அம்பலப்படுத்தியது. 1984ல் என்டிஆர் அரசை காங்கிரஸ் கவிழ்த்தபோது, ​​ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஈநாடு போராடியது. 2003ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் நடைபயணம் ஈநாடு செய்தித் தாள்களில் பரவலாக இடம் பெற்றன.

அதேநேரம் காங்கிரஸ் கட்சி குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஈநாடு செய்தித் தாள் வெளிப்படுத்த தவறியதில்லை. 2019ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் பாதயாத்திரையும் ஈநாடு விளம்பரப்படுத்தியது. அதுகுறித்து ஈநாடு பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டன. அதேநேரம் ஜெகன் மோகன் ஆட்சியில் நடந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஈநாடு, ஈடிவி, ஈடிவி பாரத் செய்தி நிறுவனங்கள் குரலெழுப்பின.

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உருவாக்கத்தை கண்ட ஈநாடு: ஊடகத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதற்கேற்ற வகையில் மக்களிடையே புதிய பரிமாணத்தில் செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்த ராமோஜி ராவ், செய்தி நாளிதழின் அடுத்த கட்டமாக டிஜிட்டல் துறையில் கால்பதித்தார். 1999 ஆம் ஆண்டு Eenadu.net என்ற டிஜிட்டல் தளம் துவங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தெலுங்கு மக்கள் Eenadu.net டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அன்றாட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அந்நிறுவனத்தை தொடங்கிய ராமோஜி ராவ் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சியில் புதுப் புரட்சியை ஏற்படுத்திய ஈடிவி: அச்சு ஊடகத் துறையில் ஈநாடு கோலோச்சிய நிலையில், மின்னணு ஊடகத் துறையிலும் கால் பதித்தார் ராமோஜி ராவ். அவர் தொடங்கிய ஈடிவி, தெலுங்கு தொலைக்காட்சியின் சுருக்கமாக கருதப்பட்டது. ஈடிவி, காட்சி ஊடகங்களில் உள்ள ஸ்டீரியோடைப்களை மாற்றியது, ஆகஸ்ட் 27, 1995 அன்று தெலுங்கில் முதல் 24 மணி நேர சேனலாகத் தொடங்கப்பட்டது ஈடிவி.

பொழுதுபோக்கை குறிக்கும் வகையில் ஈடிவி இருந்தாலும் நடுத்தர குடும்ப பார்வையாளர்களின் பொழுதுபோக்கை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகின. வாரம் ஒரு சீரியலை ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர்களை தினசரி சீரியல்கள் கொண்ட டிவிகளில் ஒட்டிக்கொள்ள வைத்தது ஈடிவி.

ஈடிவி சினிமா பொழுதுபோக்கு வட்டத்தில் சிக்கவில்லை. விடியல் நிகழ்ச்சி அன்னதாதாவுக்கு அறுவடையின் விழிப்புணர்வைக் கற்றுக் கொடுத்தது. ராமோஜி ராவ் நடத்திய மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடனான "Padutha Teeyaga" நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான பாடகர்களை திரையுலகிற்கு அளித்து இன்றும் வழங்கி வருகிறது.

'ஸ்டார் வுமன்' போன்ற நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 'ஜபர்தஸ்த்' நகைச்சுவை நிகழ்ச்சி பார்வையாளர்களை சத்தமாக சிரிக்க வைத்தது, மேலும் ரியாலிட்டி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்த்து பொழுதுபோக்கின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. தொடர்ந்து புதுப்புது நிகழ்ச்சிகள் மூலம் அன்றாட மக்களின் வாழ்வியலோடு இணைந்தது ஈடிவி.

விரிவாக்கப்பட்ட ஈடிவி நெட்வோர்க்: ஈடிவி நிறுவனத்திற்கான பொது மக்களின் வரவேற்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஈடிவி நெட்வோர்க் விரிவடைந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில், ETV Bangla தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குள் மராத்தி சேனல், அதைத் தொடர்ந்து ஐந்து மாதங்களில் ஈடிவி கன்னட ஒளிபரப்பு தொடங்கியது.

2001 ஆகஸ்ட் மாதம் ETV உருதுவில் ஒளிபரப்பைத் தொடங்கியது. ஜனவரி 2002ஆம் ஆண்டு, ராமோஜி ராவ் ஒரே நாளில் ஆறு சேனல்களைத் தொடங்கி ஊடக வரலாற்றில் மற்றொரு பரபரப்பை உருவாக்கினார். பிராந்திய மொழி சேனல்கள் மூலம், ETV மக்களைச் சென்றடைந்து பரந்த நெட்வொர்க்காக மாறியது.

பொழுதுபோக்கு நெட்வோர்க்காக இயங்கி வந்த ஈடிவி நெட்வோர்க்கை தகவல் புரட்சிக்கு ஏற்ற வகையில் மாற்றம் கொண்டு வர நினைத்த ராமோஜி ராவ், ஈடிவி செய்தி சேனலை தொடங்கினார். கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈடிவி செய்தி சேனல் தொடங்கப்பட்டது. 2014அம் ஆண்டு ஆந்திர பிரதேசம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, ETV ஆந்திரப் பிரதேசம் மற்றும் ETV தெலுங்கானா பிரிக்கப்பட்டு தொடர்ந்து மக்களுக்கு தேவையான சமீபத்திய செய்திகள், பகுப்பாய்வு மற்றும் நிஜ வாழ்க்கைக் கதைகளை வழங்கத் தொடங்கின.

எதிர்காலத்தின் பிரதிபலிப்பாய் விரிவடைந்த டிஜிட்டல் ஊடகத்துறை: பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஈடிவி நெட்வொர்க்கை விரிவுபடுத்தினார் ராமோஜி ராவ். ஈடிவி பிளஸ், ஈடிவி சினிமா, ஈடிவி அபிருச்சி மற்றும் ஈடிவி ஆன்மீகம் போன்ற சேனல்களை உருவாக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்தார்.

ஈடிவி பாரத்: எதிர்காலத்தை எதிர்பார்த்து, மிகப்பெரிய டிஜிட்டல் மீடியா பிரிவான ஈடிவி பாரத் தொடங்கினார் ராமோஜி ராவ். ஈடிவி பாரத் 13 மொழிகளில் செய்திகளை வழங்கும் மிகப்பெரிய டிஜிட்டல் தளமாகும், உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் நோக்கமாக ஈடிவி பாரத் தொடர்ந்து இயங்கி வருகிறது.

குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் OTT வென்ச்சர்ஸ்: குழந்தைகளுக்கு பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற ராமோஜி ராவின் யோசனை 'ஈடிவி பால பாரத்' பிறப்பதற்கு வழிவகுத்தது. 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 12 மொழிகளில் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது ஈடிவி பால பாரத். ETV-யின் ஆப்ஸ் மூலம் பொழுதுபோக்கின் எதிர்காலமான OTT தளத்தில் நிறுவனம் நுழைந்தது.

ராமோஜி ராவின் புதுமையான மனப்பான்மை மற்றும் உண்மை மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை ஊடக நிலப்பரப்பில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது மரபு தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி ஊக்கமளிக்கிறது. ஊடகங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் போது, ​​சமூகங்களை மாற்றியமைக்கவும், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை உயர்த்தவும் முடியும் என்பதை நிரூபிக்கிறது.

அவரது ஊடகப் பயணம், அச்சு முதல் எலக்ட்ரானிக் முதல் டிஜிட்டல் வரை, அவரது இடைவிடாத கண்டுபிடிப்பு மற்றும் சிறந்து விளங்குவதைக் காட்டுகிறது, அவரை இந்தத் துறையில் உண்மையான முன்னோடியாக மாற்றுகிறது.

இதையும் படிங்க: ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார் - RAMOJI RAO PASSED AWAY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.