வயநாடு: கடந்த ஜூலை 30ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இந்த நிலச்சரிவில் விலை மதிப்பில்லாத உயிரிகள் பறிபோனது.
இந்த நிலையில், சூரல்மலை மற்றும் முண்டகை ஆகிய பகுதிகளில் இருந்த கடைகள் மற்றும் தேவாலயம் போன்றவற்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள வெள்ளப் பெருக்கில், அப்பகுதியில் இருந்து அனைத்து பொருட்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை சாலையில், அப்துல் கபூர் என்பவர் 'ராயல்' என்ற பெயரில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், வயநாடு மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தனது கடையில் விற்பனையாகும் பொருட்களுக்கான ஒருநாள் விற்பனைத் தொகை முழுவதையும் வயநாட்டு மக்களின் கஷ்டங்களை துடைக்கும் வண்ணமாக நிதி கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.
கோரத்தாண்டவம் ஆடிய வயநாடு நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள்..#WayanadLanslide #wayanadtragedy #CCTV #keralaflood #etvbharattamilnadu pic.twitter.com/CSYdoSNT5q
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) August 18, 2024
இதனை அடுத்து, இன்று (ஆக.18) காலை 10 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையில் கடையில் நடைபெறும் விற்பனைத் தொகை முழுவதும் அங்கு வயநாட்டிற்கு என வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். கடையில் விற்பனையாகும் விற்பனைத் தொகையை மட்டுமல்லாது, வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் தங்களால் முடிந்த தொகையையும் செலுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், அப்துல் கபூர் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தினை வயநாடு நிதிக்காக வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். அதேபோன்று, இன்று இந்த கடைக்கு பால் விற்பனை செய்யும் விற்பனையாளர், இன்று ஒருநாள் கடைக்கு வழங்கக்கூடிய பாலினை இலவசமாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக பிரதமர் பேச்சு உள்ளது” - ஜவாஹிருல்லா கருத்து!