ETV Bharat / bharat

ஆந்திராவில் ராஜ்யசபா எம்பிக்கள் 8 பேர் ராஜினாமா? - ஜெகன் மோகனுக்கு அடுத்த அதிர்ச்சி..! - YSRCP Rajya sabha MPs resign - YSRCP RAJYA SABHA MPS RESIGN

YSRCP Rajya sabha MPs resign issue: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா செய்து வெவ்வேறு கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்பிக்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பேடா மஸ்தான் ராவ்
எம்பிக்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பேடா மஸ்தான் ராவ் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 1:22 PM IST

டெல்லி: ஆந்திராவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர் சரிவை கண்டு வருகிறது. கட்சியில் இருந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

முன்னதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பேடா மஸ்தான் ராவ் ஆகியோர் இன்று தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்க டெல்லிக்கு விரைந்துள்ளனர். அதேவேளையில், மேலும் 6 எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ராஜினாமா செய்யவுள்ள 8 பேரில் 4 பேர் தெலுங்கு தேசம் கட்சியிலும், 4 பேர் பாஜக-விலும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, அரசியலில் நீண்ட காலமாக உள்ள எம்பிக்கள் தெலுங்கு தேச கட்சியிலும், தொழிலதிபர்களாக இருந்து மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பாஜகவிலும் சேரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியிலிருந்து 11 இடங்களிலும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு ஒய்எஸ்ஆர் கட்சியில் இருந்து தலைவர்கள் பலர் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பெங்களூரு ஏர்போர்ட்டில் தொழிலாளி கொடூர கொலை.. திருமணத்தை மீறிய உறவு காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.