குறுக்கே வந்த காரை மிரட்டிய காட்டு யானை! - கோத்தகிரி சாலை
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். நேற்று நள்ளிரவு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சப்பன்னை அருகே காட்டு யானை ஒன்று சாலையைக் கடக்கும்போது, அதன் குறுக்கே வந்த கார் ஒன்றைத் தாக்குவதுபோல் மிரட்டியுள்ளது. காரை ஓட்டிச்சென்றவர் உடனடியாக சுதாரித்து, காரை பின்புறமாக இயக்கி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.