கேரளாவில் அழிந்துவரும் கடல்வாழ் உயிரினமான திமிங்கல சுறா உயிரிழப்பு - whale shark endangered
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அடிமலத்தூர் கடற்கரையில் நேற்று திமிங்கல சுறா ஒன்று உயிருடன் கரையோதுங்கியது. இதை உள்ளூர் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் தள்ள முயற்சித்தனர். ஆனால், அதற்குள் திமிங்கல சுறா உயிரிழந்தது. இதையடுத்து கடலோர காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சுறாவின் உடலை மீட்டு புதைத்தனர்.