கடலூரில் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்துடன் நிறைவுபெற்ற நெய்தல் கோடைவிழா! - மிழ் கலாசாரம்
கடலூரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நெய்தல் கோடை விழா கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கோடை விழா நடைபெறாமல் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நெய்தல் கோடை விழா தொடங்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ் கலாசாரம், குழு நடனம், அரசு கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம், குழந்தைகளின் யோகா நிகழ்ச்சி, கல்லூரி மாணவிகளின் தனிநடிப்பு மற்றும் நிறைவாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரைப்பட பின்னணி பாடகர்கள் நித்தியஸ்ரீ,சந்தோஷ்,பரிதா ஆகியோர் பங்குபெற்ற லெசிராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.