Video: கட்டுப்பாட்டை இழந்து டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் நகரில் ஷிவ்புரி சாலையில் அதிவேகமாக வந்த டபுள் டக்கர் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.