சென்னை போல மாறிய கிருஷ்ணகிரி மழை நீரில் மிதந்த வாகனங்கள்! - சென்னை போல மாறிய கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோக்களை இயக்க முடியாமல் தண்ணீரில் தள்ளி சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின இதுபோல கிருஷ்ணகிரி பகுதியிலும் மழையின் காரணமாக வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.