Video: எடப்பாடியை கலாய்த்த உதயநிதி - ஓபிஎஸ் கூறிய அதிரடி பதில்! - ஒபிஎஸ் பதில்
சட்டப்பேரவையில் இன்று (ஏப்.21) பேசிய உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துப் பேசியுள்ளார். 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால், எனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்றுவிடாதீர்கள்' என நகைச்சுவையாக கூறினார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், 'எங்களது கார் எப்போதும் எம்ஜிஆர் புரட்சி தலைவி மாளிகைக்குத் தான் செல்லும்' எனத் தெரிவித்தார்.
Last Updated : Apr 21, 2022, 11:00 PM IST