விமான பயணிகளிடம் உள்ளூர் மொழிகளை பேச மத்திய தொழிற்படை போலீசாருக்கு பயிற்சி - சென்னை
சென்னை: 76 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி,விமான நிலையத்தில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். . இந்நிகழ்ச்சியில் விமான நிலைய உயர் அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய டி.ஐ.ஜி. ஸ்ரீராம்,” சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையம் கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பணியில் ஈடுபடும் மத்திய தொழிற்படை போலீசாருக்கு உள்ளூர் மொழிகளில் பயணிகளிடம் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.