கொடைக்கானலில் தொடர் மழை - குடையுடன் சுற்றுலாப் பயணிகள் குதூகலம் - கொடைக்கானலில் தொடர் மழை
திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து அவ்வபோது கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களாகவே சாரல் மழை பெய்தது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளான பிரையண்ட் பூங்கா, ஏரி, மூஞ்சிக்கல், கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் வார விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையில் சுற்றுலாப் பயணிகள் குடை பிடித்து பூக்களை ரசித்தும் மகிழ்ந்து வருகின்றனர். மழையில் நனைந்த படி புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.