2000 மீட்டர் நீளமுடைய தேசியக்கொடியை ஏந்தி நின்ற மாணாக்கர்கள்... - Anganwadi workers are more than a thousand including policemen and civilians
ஈரோடு: புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின நிறைவுவிழாவை முன்னிட்டு தனியார் அமைப்புகள் சார்பில் 2,000 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்தி நின்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள டானா புதூர் காவல்துறை சோதனைச்சாவடியில் இருந்து ஆதிபராசக்தி அம்மன் கோயில் வரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு 2,000 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியை தனியார் பள்ளி மாணவ மாணவியர் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கைகளில் ஏந்தியவாறு சாலையில் அணிவகுத்து நின்றனர். இதைத்தொடர்ந்து சுதந்திர தின விழா ஜோதியை மாணவ மாணவியர் ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக ஏந்திச்சென்றனர்.
TAGGED:
ஈரோடு புஞ்சை புளியம்பட்டி